புலம்பெயர் நபர்களின் நண்பர்களுக்கான இலவச நுழைவு இசைவுச் சீட்டு
October 3 , 2024 299 days 268 0
முதன்முறையாக, இந்தியா புலம்பெயர் நபர்களின் "நண்பர்கள்" இலவச நுழைவு இசைவுச் சீட்டினைப் பெற அனுமதிக்க உள்ளது.
சிறப்பு இணையதளத்தில் OCI (வெளிநாடு வாழ் இந்தியர்) அட்டைதாரர்களால் பரிந்துரைக்கப் பட்ட ஐந்து வெளிநாட்டினர் இலவச நுழைவு இசைவுச் சீட்டினைப் பெற தகுதி பெறுவர்.
இந்த முன்னெடுப்பானது, "சலோ இந்தியா" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொடங்கப் பட உள்ளது.
OCI அட்டைதாரர்கள் சில வாரங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ள சிறப்பு இணைய தளத்தில் பதிவு செய்து, அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நண்பர்களின் விவரங்களை உள்ளிட வேண்டும்.
அதன் சரிபார்ப்பிற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட குறியீடு ஒதுக்கப்படும்.
இதில் பரிந்துரைக்கப்பட்ட நண்பர்கள் இலவச நுழைவு இசைவுச் சீட்டினைப் பெற இந்தச் சிறப்புக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
அரசாங்கப் பதிவுகளின்படி, சுமார் நான்கு மில்லியன் OCI அட்டைதாரர்கள் உள்ளனர்.
அவர்கள் முடிந்தவரை பல நண்பர்களை அழைத்துக் கொள்ளலாம் மற்றும் அவர்கள் மிகவும் வெற்றிகரமாக இந்தியாவிற்குள் வரவழைக்கும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பார்வையாளருக்கும் அதற்கேற்ற வெகுமதிப் புள்ளிகளைப் பெறுவர்.