TNPSC Thervupettagam

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு

June 14 , 2020 1864 days 679 0
  • இந்திய அரசு தனது முதன்மைத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் சேர்த்து விரிவுபடுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் தேசியச் சுகாதார ஆணையமானது இந்தத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் தகுதியான புலம்பெயர்ந்தோருக்கு அவர்களுக்கான மின்னணு அட்டைகளை வழங்கும்.
  • திரும்பி வரும் தொழிலாளர்கள் கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
  • மேலும் ஆயுஷ்மான் பாரதத்தின் பயனாளிகளில் குறைந்தது 80% பயனாளிகள் கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்பது காகிதமில்லா மற்றும் பணம் செலுத்த தேவையில்லா வசதியினைக் கொண்டுள்ள ஒரு திட்டமாகும், இது ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்