புலம்பெயர்ந்தவர் மற்றும் தாய்நாடு திரும்பியவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு
July 6 , 2018 2828 days 976 0
புலம்பெயர்ந்தவர் மற்றும் தாய்நாடு திரும்பியவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான ஒரே குடையின் கீழ் அமைந்த திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புலம் பெயர்ந்தவர் மற்றும் நாடு திரும்பியவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மார்ச் 2020 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், இலங்கை அகதிகள், திரிபுராவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள குடும்பங்கள், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள், பயங்கரவாத தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மதவாத மற்றும் மாவோயிஸ்ட் வன்முறையின் போது பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர்.