TNPSC Thervupettagam

புலிகள் வாழும் நிலப்பரப்புகள் குறித்த சர்வதேச பயிலரங்கம்

September 20 , 2026 5 hrs 0 min 38 0
  • புலிகள் வாழும் நிலப்பரப்புகள் குறித்த சர்வதேச பயிலரங்கம் புது தில்லியில் தொடங்கப் பட்டது.
  • சர்வதேசப் பெரும்பூனை கூட்டமைப்பு (IBCA), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) ஆகியவை இணைந்து இப்பயிலரங்கத்தை ஏற்பாடு செய்தன.
  • இதன் மையக்கருத்துரு "புலிகள் நிலப்பரப்புகள்: வாழ்வாதாரம் மற்றும் வருமான உருவாக்கத்திற்கான தூண்களாகப் பாதுகாப்பு, உயிரிப் பொருளாதாரம் மற்றும் சூழலியல் சுற்றுலா" என்பதாகும்.
  • நிலப்பரப்பு பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் இயற்கை சார்ந்த நிதியளிப்பு ஆகியவற்றுக்காக IBCA மற்றும் ADB இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • புலிகள் நிலப்பரப்புகள் நீர் பாதுகாப்பு, பருவநிலை ஒழுங்குமுறை மற்றும் கார்பன் சேமிப்பு ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதோடு, உள்ளூர் வாழ்வாதாரங்களையும் ஆதரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்