புலிகள் வளங்காப்பக இடமாற்றங்களுக்கான புதிய விதிகள்
November 16 , 2025 11 days 44 0
புலிகள் வளங்காப்பகங்களில் இடமாற்றம் மற்றும் சகவாழ்வு குறித்த புதிய கொள்கை கட்டமைப்பை மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட கொள்கை குறிப்பு, புலிகள் வளங்காப்பகங்களிலிருந்து வனவாசிச் சமூகங்களை இடமாற்றம் செய்வதற்கான நடைமுறைகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் (FRA) கீழ் உரிமைகளை ஒதுக்கீடு செய்த பின்னரே இடமாற்றம் நிகழ வேண்டும் என்று அது கூறுகிறது.
எந்தவொரு பகுதியையும் புலிகள் வளங்காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிப்பதற்கு முன்பு கிராம சபை அளவிலும் வீடுகள் அளவிலும் ஒப்புதல் சரிபார்ப்பு தேவையாகும்.
இது சமூகத்தை மையமாகக் கொண்ட வளங்காப்பு மற்றும் இட மாற்றத்திற்கான தேசிய கட்டமைப்பையும், வளங்காப்பு-சமூக இடைமுகம் குறித்தத் தேசிய தரவுத் தளத்தையும் (NDCCI) முன்மொழிகிறது.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் (WPA) 1972 மற்றும் FRA ஆகியவற்றுடன் இணங்கச் செய்வதை உறுதி செய்ய வருடாந்திர சுயாதீனத் தணிக்கைகளை இது பரிந்துரை செய்கிறது.