புலிகள் வளங்காப்பகத்திற்காக நிலம் கையகப்படுத்துதல்
March 21 , 2024 511 days 571 0
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வளங்காப்பகத்தின் (SMTR) மையப் பகுதியில் அமைந்துள்ள 30.41 ஏக்கர் அளவிலான தனியார் பட்டா நிலத்தை முதன்முறையாக தமிழ்நாடு வனத்துறை கையகப் படுத்தியுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த வளங்காப்பகம் ஆனது மாநிலத்தில் உள்ள ஐந்து புலிகள் வளங்காப்பகங்களில் சமீபத்திய வளங்காப்பகம் ஆகும்.
2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல், மறுசீரமைத்தல் மற்றும் மீள்குடியேற்ற சட்டத்தின் நியாயமான இழப்பீடு பெறுதல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையின் கீழ் தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
காடு மற்றும் பல்லுயிர் வளங்காப்பிற்கான வணிக ரீதியான பயன்பாட்டிற்காக மாநில அரசு தனியார் நிலத்தை வாங்குவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.