புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவு
April 2 , 2023 861 days 380 0
புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரில் 3 நாட்கள் அளவிலான மாபெரும் நிகழ்ச்சி நிகழ்த்தப்படவுள்ளது.
இந்திய அரசானது, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று கார்பெட் தேசியப் பூங்காவில் புலிகளின் வளங்காப்பினை ஊக்குவிக்கும் வகையில் புலிகள் வளங் காப்புத் திட்டத்தினைத் தொடங்கியது.
இது அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப் பட்டது.
1973 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்ட நேரத்தில், 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒன்பது புலிகள் காப்பகங்களை இத்திட்டம் உள்ளடக்கியிருந்தது.
இன்று, சுமார் 3000 புலிகளுடன் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 53 புலிகள் காப்பகங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
உலக வனப் புலிகளின் எண்ணிக்கையில் 70%க்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ள நிலையில், இது ஆண்டிற்கு 6% என்ற வீதத்தில் அதிகரித்து வருகிறது.