TNPSC Thervupettagam

புலிகள் – கணக்கெடுப்பு, பாதுகாப்பு மற்றும் காப்பகங்கள்

July 30 , 2019 2115 days 1277 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று சர்வதேசப் புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இக்கொண்டாட்டத்தின் போது, இந்தியாவில் நான்காவது புலிகள் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
  • இந்த ஆய்வானது, இந்திய வனவிலங்கு நிறுவனத்தினால் (WWI - Wildlife Institute of India) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இந்தியா ஒட்டுமொத்தமாக 2967 புலிகளைக் கொண்டுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • முதலாவது புலிகள் கணக்கெடுப்பு 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • தற்பொழுது இந்த ஆய்வு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது.

  • மத்தியப் பிரதேசம் மிக அதிக அளவிலாக 526 புலிகளைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து கர்நாடகா (524) மற்றும் உத்தரகாண்ட் (442) ஆகிய மாநிலங்கள் அதிக புலிகளைக் கொண்டுள்ளன.
  • சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகம் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டுள்ளது.
  • “Tx2” என்ற ஒரு திட்டமானது 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டின் போது உலக வனவிலங்கு அமைப்பினால் (World Wildlife Foundation - WWF) தொடங்கப்பட்டது.
  • இதன்கீழ், புலிகளைக் கொண்டு  இருக்கும் 13 நாடுகள் 2022 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
  • உலக வனவிலங்கு அமைப்பின் “Tx2” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தனது புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக்கிய உலகின் முதலாவது நாடு நேபாளம் ஆகும்.

தமிழ்நாடு புள்ளி விபரங்கள்

  • தமிழ்நாட்டில் உள்ள 4 புலிகள் காப்பகங்களும் இந்தக் கணக்கெடுப்பில் “மிகவும் சிறந்ததாக” தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அவையாவன
    • முதுமலை புலிகள் காப்பகம்
    • ஆனைமலை புலிகள் காப்பகம்
    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் (STR)
    • களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம்
  • தமிழ்நாட்டில் உள்ள STR ஆனது 2014 ஆம் ஆண்டு முதல் “மிகப் பெரிய அளவிலான முன்னேற்றத்தைப்” பதிவு செய்துள்ளது. இங்கு 2014 ஆம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
  • நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பில் STR-ல் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பிற்காக இதற்குப்  பிரதம அமைச்சரால் விருது வழங்கப்பட்டது.
  • மேலும் பின்வருவனவற்றை இணைத்து தமிழ்நாட்டில் 5-வது புலிகள் காப்பகத்தை அமைப்பதற்குப்  பரிந்துரைக்க செய்யப்படுகின்றது.
    • தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனவிலங்கு சரணாலயம்
    • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்