பத்திரிகைத் துறையில் 15 பிரிவுகள் மற்றும் புத்தகங்கள், நாடகம், இசை போன்ற 8 பிரிவுகள் உட்பட மொத்தம் 23 பிரிவுகளில் புலிட்சர் பரிசுகளை வென்றவர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
ரியூட்டர்ஸ், ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகியவை இந்தப் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருதுகளை வென்றன.
தி நியூயார்க் டைம்ஸ் இதழானது 4 பிரிவுகளில் நான்கு விருதுகளை வென்றது.
'ஃபென்டனைல் எக்ஸ்பிரஸ்' என்ற விரிவான ஒரு தொடருக்காக ரியூட்டர்ஸ் இதழுக்குப் புலனாய்வுக் கட்டுரைக்கான புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.
'தி வாஷிங்டன் போஸ்ட் முன்னாள் தலையங்க கேளிக்கைச் சித்திர வடிவமைப்பாளர் ஆன் டெல்னேஸ், விளக்கப் படத்துடன் கூடிய கட்டுரை மற்றும் விளக்கவுரைப் பிரிவில் இந்த விருதினை வென்றார்.