ஸ்டெப்பி கழுகுகளுக்கான உலகளாவிய செயல்பாட்டுத் திட்டம் 2026-2035
April 2 , 2026 177 days 319 0
பிரேசிலில் நடைபெற்ற 'CMS COP15' மாநாட்டில் புல்வெளிக் கழுகுகளுக்கான உலகளாவியச் செயல்பாட்டுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது அழிந்து வரும் நிலையில் உள்ள புல்வெளிக் கழுகுகளை (அக்விலா நிபாலென்சிஸ்) பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச பாதுகாப்புத் திட்டமாகும்.
மின்சாரம் தாக்கி இறத்தல், சட்டவிரோத வேட்டை மற்றும் விஷம் வைத்தல் போன்ற காரணிகளைக் குறைப்பதன் மூலம் கழுகுகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் வாழ்விட மறுசீரமைப்பு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் நாடுகளுக்கு இடையேயான சிறந்த அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
இவை புல்வெளிகள் மற்றும் பகுதி வறண்டப் பகுதிகளில் காணப்படும் புலம்பெயரும் பறவைகளாகும்; இவை மத்திய ஆசிய வான்வழிப் பாதையை பின்பற்றுகின்றன.
இந்தியாவில், ராஜஸ்தானின் பாலைவனத் தேசியப் பூங்கா மற்றும் ஜொர்பீர் பாதுகாப்பு காப்பகம் போன்றவை இவற்றின் முக்கிய வாழ்விடங்களாகும்.