புளூ ஆரிஜின் விண்வெளிப் பயணத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
July 16 , 2021 1623 days 698 0
அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பானது (Federal Aviation Administration) நியூ செபர்டு ஏவுகல அமைப்பில் விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கான புளூ ஆரிஜின் நிறுவனத்தின் உரிமத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஜெஃப் பேசோஸ், ஜூலை 20 அன்று புளூ ஆரிஜினின் முதல் விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்வெளிக்குக் செல்ல உள்ளார்.
இந்த உரிமமானது ஆகஸ்ட் வரையில் செல்லுபடியாகும் நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கு புளூ ஆரிஜின் நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.
இந்தப் பயணத்தை அது டெக்சாசில் உள்ள ஒன் ஃபெசிலிட்டி எனும் தனது ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது.
விண்வெளிச் சுற்றுலாத் துறையில் ஒரு போட்டியாளராக திகழும் விர்ஜின் கேலக்டிக் தனது விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியதைத் தொடர்ந்து இந்தப் பயணமானது மேற்கொள்ளப்பட உள்ளது.
விர்ஜின் கேலக்டிக், புளூ ஆரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை வழக்கமான வணிக ரீதியிலான விண்வெளிப் பயண முறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கப் பணியாற்றி வருகின்றன.
விண்வெளிப் பயணமானது “கோடீஸ்வரர்களின் விண்வெளிப் பந்தயம்” (billionaire space race) எனவும் குறிப்பிடப்படுகிறது.