புள்ளி அலகு கூழைக்கடா பறவைகள் பெருவாரியாக உயிரிழப்பு
January 31 , 2022 1393 days 692 0
ஆந்திரப் பிரதேச மாநில வனத் துறையானது இந்திய வனவிலங்கு நிறுவனம் (டேராடூன்), பாம்பே இயற்கை வரலாற்றுச் சமூகம் மற்றும் இந்திய உயிரியல் கணக்கெடுப்பு நிறுவனம் (கொல்கத்தா) ஆகியவற்றின் நிபுணர்களை அணுகி உள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் தெளிநீலப் புரம் எனுமிடத்தில் அமைந்த நவ்பாடா சதுப்பு நிலப் பகுதியில் புள்ளி அலகு கூழைக்கடாப் பறவைகள் கொத்து கொத்தாக மடிவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.
தெளிநீலப் புரமானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கூழைக்கடா பறவைகள், நெமட்டோட் (உருளைப்புழு) என்ற தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும், ஒரு முக்கியப் பறவைவாழ் பகுதியாகும்.