November 22 , 2025
6 days
36
- புவி அறிவியல் அமைச்சகம் ஆனது, பின்வரும் ஐந்து நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக புவி அமைப்பு அறிவியல் சபையை உருவாக்கியுள்ளது:
- இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM - புனே)
- தேசியப் புவி அறிவியல் ஆய்வு மையம் (NCESS - திருவனந்தபுரம்)
- தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (NIOT - சென்னை)
- துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCPOR - கோவா) மற்றும்
- இந்தியத் தேசியப் பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS – ஐதராபாத்).
- முதல் பொதுக்குழு கூட்டம் ஆனது, இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரே நிர்வாக அமைப்பில் எவ்வாறு இணைந்து செயல்படும் என்பதை மதிப்பாய்வு செய்தது.
- இந்த இணைப்பானது புவி அறிவியல் நிறுவனங்களில் செயல்திறனை மேம்படுத்தச் செய்வதையும் நிர்வாகக் குறுக்கீடுகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- புதிய சபையின் ஒருங்கிணைந்த விதிகளைப் பின்பற்றும் நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் அதன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.
- அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு ஒருங்கிணைந்த வருடாந்திர அறிக்கையை வெளியிடுவதற்கான திட்டம் குறித்து சபை ஆய்வு செய்து வருகிறது.

Post Views:
36