TNPSC Thervupettagam

புவி வெப்ப ஆற்றல் மையம் – லடாக்

August 25 , 2022 1043 days 791 0
  • லடாக்கில் 14,000 அடி உயரத்தில் அமைந்த நிலப்பகுதியில் புவி வெப்ப ஆற்றலை பயன்படுத்தச் செய்வதற்கான மையத்தினை ONGC நிறுவனம் கட்டமைக்க உள்ளது.
  • இது இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மிக உயர்ந்த புவி வெப்ப ஆற்றல் மையமாக விளங்கும்.
  • இது லடாக் பகுதியின் ஆற்றல் திறனை இந்தியாவின் தூய்மை ஆற்றல் வளம் நிறைந்த பகுதிகளுள் ஒன்றாக வெளிக் கொணர்வதற்கான வாய்ப்பினை அதிகரிக்கும்.
  • இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம் அதன் கார்பன் தடயத்தை ஈடு கட்டுவதற்காகப் பின்பற்றிய உத்தியின் ஒரு பகுதியாக புவி வெப்ப ஆற்றல் முன்னெடுப்பானது உள்ளது.
  • அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் நியூசிலாந்து ஆகியவை ஜிகாவாட் அளவிலான புவி வெப்ப உற்பத்தித் திறன்களைக் கொண்டு உள்ளன.
  • மெக்ஸிகோ மற்றும் இத்தாலி 900 மெகாவாட் திறன் கொண்ட மையங்களையும், கென்யா 800 மெகாவாட்டிற்கு மேலான திறன் கொண்ட நிலையங்களையும் கொண்டு உள்ள நிலையில் ஐஸ்லாந்து, ஜப்பான் மற்றும் பிற நாடுகள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்