TNPSC Thervupettagam

புவிசார் குறியீடு பெற்ற காஷ்மீரிக் கம்பளம்

March 17 , 2022 1179 days 493 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசானது, அங்கு உள்ள புவிசார் குறியீடு பெற்ற காஷ்மீரிக் கம்பளத்திற்கான விரைவுக் குறியீட்டை (QR code) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது கையால் நெய்யப்பட்டக் கம்பளங்களின் நுணுக்கத்தினையும் அதன் நம்பகத் தன்மையையும் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
  • விரைவுக் குறியீடு பதிக்கப்பட்டச் சீட்டினை நகலெடுக்கவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ முடியாது என்பதால், இது பெருநிறுவனங்களால் தயாரிக்கப்படும் போலிக் கம்பளங்களின் உற்பத்தியைத் தடுக்கும்.
  • இதற்கிடையில், புவிசார் குறியீடு பெற்ற கையால் நெய்யப்பட்டக் கம்பளங்களின் (தரை விரிப்புகளின்) முதல் சரக்குப் பெட்டகமானது இந்த மார்ச் மாதத்தில் புது டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்