TNPSC Thervupettagam

புவியிடங்காட்டி சேவை முடக்கம் - இஸ்ரேல்

April 25 , 2024 9 days 154 0
  • இஸ்ரேல் மீதான ஈரானின் முதல் நேரடித் தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேலிய உளவுத் துறையானது தனது நாட்டு எல்லைக்குள், தெஹ்ரானின் எறிகணை இலக்கு நிர்ணயக் குழுவினை குழப்புவதற்காக (புவியிடங்காட்டி) GPS வழிசெலுத்தல் அமைப்பு சமிக்ஞைகளை முடக்கியது.
  • இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் உந்துவிசை மற்றும் சீர்வேக ஏவுகணைகள் அனைத்தும் அவற்றின் இலக்குகளைத் தாக்கத் தவறின.
  • இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் இணைந்து 99 சதவீத எறிகணைகள் இஸ்ரேலை நோக்கி வருவதற்கு முன்பே அவற்றை இடைமறித்தன.
  • பொதுவாக, புவியிடங்காட்டிக் கருவியினை முடக்குதல் அல்லது ‘குழம்பச் செய்தல்’ என்பது போர் மண்டலங்களில் அல்லது இராணுவ நடவடிக்கைகளின் போது தகவல் தொடர்பு மற்றும் புவியிடங்காட்டி கருவிகளின் சமிக்ஞைப் பரிமாற்றங்களை நன்கு சீர்குலைப்பதற்காகப் போரில் பயன்படுத்தப்படுகிறது.
  • அவை தகவல்தொடர்புகளை சீர்குலைத்து, சமிக்ஞை இழப்புகள் அல்லது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தலாம் ஆனால் எதிரி நாடுகளின் பல்வேறு வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் துல்லியமான வழிகாட்டுதல் ஆயுதங்களையும் சீர்குலைக்கும்.
  • அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் இதற்கு முன்னர் பெரிய அளவிலான புவியிடங்காட்டி கருவி முடக்கப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன, ஆனால் அவை போர்க் காலங்களில் மேற்கொள்ளப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்