புவியின் இயற்கை வளங்கள் அனைத்தும் தீரும் நாள் 2024 - ஆகஸ்ட் 01
August 7 , 2024 401 days 271 0
இந்த தினமானது Global Footprint Network அமைப்பினால் கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சுற்றுச்சூழல் வளங்கள் மற்றும் சேவைகளுக்கான மனித குலத்தின் தேவையானது, அந்த ஆண்டில் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளால் மீண்டும் உருவாக்கக்கூடிய அளவினை விஞ்சும் தேதியை இந்த நாள் குறிக்கிறது.
மனிதகுலம் ஆனது, தற்போது நமது புவிக் கிரகத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மீளுருவாக்கும் வளங்களை விட சுமார் 1.7 மடங்கு வேகமாக இயற்கை வளங்களைப் பயன்படுத்துகிறது.