உலகளாவியப் பருவநிலை தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் புவியை சரிசெய்தல் நடவடிக்கைக்கான பரிசு/எர்த்ஷாட் பரிசு வழங்கீட்டு விழா நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில் இந்த விருது பெற்ற வெற்றியாளர்கள் இயற்கையைப் பாதுகாப்பதற்காக ‘ரீ.கிரீன்’ (பிரேசில்), தூய்மையான காற்றிற்காக பொகோட்டா (கொலம்பியா), கடல் புத்துயிர்ப்புக்கான தொலை தூர கடல் பகுதிகள் பாதுகாப்பு ஒப்பந்தம் (உலகளாவிய), கழிவு இல்லாத உலகத்திற்கான லாகோஸ் ஃபேஷன் வீக் (நைஜீரியா) மற்றும் பருவநிலை நடவடிக்கைக்காக நட்புறவு (வங்காளதேசம்) ஆகியவை ஆகும்.
2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பரிசு, புதுமையான சுற்றுச்சூழல் திட்டங்களை உருவாக்கும் ஐந்து வெற்றியாளர்களுக்கு தலா 1 மில்லியன் பவுண்டுகளை வழங்குகிறது.
இந்த முன்னெடுப்பு பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் பருவநிலை ஆதரவை நிலையான நடைமுறைகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.