பூங்காவில் புலிகளைக் காண்பதற்கான சுற்றுப் பயணத்திற்குத் தடை
March 13 , 2024 512 days 347 0
ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவின் முக்கியப் பகுதிகளில் புலிகளைக் காண்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வசதிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வனவிலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காப்புக்காட்டில் சட்ட விரோதமாக பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதற்காகவும், மரங்களை வெட்டியதற்காகவும் உத்தரகாண்ட் அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது.
ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது, தெராய் பகுதிகள் நிலப்பரப்புத் திட்டத்தின் கீழ் உலக இயற்கை நிதியத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட 13 பகுதிகளில் ஒன்றாகும்.
ஐந்து நிலவாழ் இனங்களில் புலிகள், ஆசிய யானைகள் மற்றும் பச்சைக் கொம்புகள் கொண்ட காண்டாமிருகம் ஆகிய மூன்று இனங்களைப் பாதுகாப்பதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.