TNPSC Thervupettagam

பூஜ்ஜிய-உமிழ்வு நிலக்கரி எரிபொருள் மின்கலம்

April 30 , 2026 15 hrs 0 min 4 0
  • பூஜ்ஜியத்திற்கு நிகரான கார்பன் உமிழ்வுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய, உலகின் முதல் நிலக்கரி அடிப்படையிலான எரிபொருள் மின்கலத்தை சீனா உருவாக்கியுள்ளது.
  • இதில் நிலக்கரியை எரிப்பதற்குப் பதிலாக, அது பதப்படுத்தப்பட்டு எரிபொருள் மின்கலத்தின் உள்ளே பயன்படுத்தப்படுகிறது.
  • இரசாயன ஆற்றலை நேரடியாக மின் ஆற்றலாக மாற்றும் ஒரு மின்வேதியியல் வினையின் மூலம் இதில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இந்த முறை எரிதலைத் தவிர்க்கிறது, எனவே இது அதிக செயல்திறனை அளிப்பதோடு மாசுபாட்டையும் குறைக்கிறது.
  • இங்கு உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடு பிடிக்கப்பட்டு, தொகுப்பு வாயு அல்லது சோடியம் பைகார்பனேட் போன்ற பயனுள்ள பொருட்களாக மாற்றப் படுகிறது.
  • இந்தத் தொழில்நுட்பம் நிலக்கரி ஆற்றலைத் தூய்மையாக்க உதவுவதோடு, குறைந்த கார்பன் ஆற்றல் பயன்பாட்டையும் ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்