TNPSC Thervupettagam

பூஜ்ஜிய மரபுசார் கழிவு - மத்தியப் பிரதேசம்

September 10 , 2026 3 days 46 0
  • 'ஸ்வச் ஷஹர் ஜோடி' (Swachh Shehar Jodi) திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேபால்பூர், 1,250 மெட்ரிக் டன் மரபு சார்ந்த கழிவுகளை சுத்திகரித்து 'பூஜ்ஜிய மரபுசார் கழிவு' (Zero Legacy Waste) நிலையை எட்டிய முதல் நகரமாக மாறியுள்ளது.
  • இந்த முயற்சி ஸ்வச் பாரத் திட்டம்-நகர்ப்புறம் 2.0-இன் (SBM-U 2.0) கீழ் இந்தூர் மாநகராட்சியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.
  • தேபால்பூர் நகரம் கழிவுகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து 100% வீடு வீடாகச் சென்று கழிவுகளை சேகரிக்கும் முறையை அடைந்துள்ளது.
  • சுமார் 4.5 டன் நெகிழிப் பொருட்கள், உலோகம் மற்றும் கண்ணாடி ஆகியவை மீட்கப் பட்டு அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டன.
  • சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்காக சுமார் 50-60 டன் கழிவில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் (RDF) இந்தூரில் உள்ள நெப்ரா (NEPRA) ஆலைக்கு அனுப்பப் பட்டது.
  • இந்தூர் நகரைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இந்தக் கழிவுச் சீரமைப்புப் பணியில் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்