மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை (MGNREGS) பூஜ்ய பாபு கிராமின் ரோஸ்கர் யோஜனா என மறுபெயரிட அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.
திருத்தப்பட்ட இந்த மசோதா ஒரு வீட்டிற்கு உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு நாட்களை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கக்கூடும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் சராசரி வேலைவாய்ப்பு நாட்கள் 50.35 நாட்களாகும்.
இந்தத் திட்டம் திறன் சாரா உடல் உழைப்பைச் செய்ய விரும்பும் வயது வந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கூலி வேலைவாய்ப்பை வழங்குகிறது.
முன்மொழியப்பட்ட மாற்றங்களில் திருத்தப்பட்ட நிதிப் பயன்பாடு, மாநிலங்களுக்கு இடையேயான ஈடு செய்தல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்டக் கண்காணிப்பு வழி முறைகள் ஆகியவை அடங்கும்.