பூபன் ஹசாரிகாவின் 100வது பிறந்தநாளின் அன்று ஆண்டுதோறுமான தேசிய அளவிலான கொண்டாட்டங்கள் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியன்று அசாமின் கௌஹாத்தியில் தொடங்கப்பட்டன.
அவரது நினைவாக இந்திய ரிசர்வ் வங்கி 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளது.
ஹசாரிகாவுக்கு 2019 ஆம் ஆண்டில் அவரது மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அசாமின் நதிக்கரை கலாச்சாரத்துடனான அவரது ஆழமான தொடர்பிற்காக அவர் 'பிரம்மபுத்திராவின் பார்ட்' என்று பரவலாக அறியப்படுகிறார்.
மனுஹே மனுஹோர் பேப், பிஸ்டிர்னோ பரோர் மற்றும் கங்கா பெஹ்தி ஹோ கியூன் போன்ற அவரது பிரபலமான பாடல்கள் மனிதநேயம், நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் கருப்பொருள்களைக் கொண்டிருந்தன.
கவிஞர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான ஹசாரிகாவின் படைப்புகள் பிராந்திய எல்லைகளைத் தாண்டி அசாம் மாநிலத்தினை தேசிய மற்றும் உலகளாவியப் பார்வையாளர்களுடன் இணைத்தன.
ஜலுக்பாரியில் உள்ள அவரது நினைவிடம் பூபன் ஹசாரிகா சமன்னய் தீர்த்தா என மறுபெயரிடப்பட்டுள்ளது.
அவரது மரபினைப் பாதுகாக்க ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாசேத்திராவில் ஒரு புதிய அருங்காட்சியகம் கட்டமைக்கப்பட உள்ளது.
அனுராதா சர்மா பூஜாரி எழுதிய வாழ்க்கை வரலாறு முக்கிய இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த நூற்றாண்டு விழா 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியன்று புது டெல்லியில் நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் ஒரு முக்கிய நிகழ்வோடு நிறைவடையும்.