ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) வியாழனின் பனி நிலவு ஆய்வுக் கலம் (JUICE) தனது மூன்றாவது பூமியின் ஈர்ப்பு விசை உதவியை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று நிறைவு செய்தது.
இந்த விண்கலம் பூமியைக் கடந்து செல்லும் போது சுமார் 12,606 கி.மீ/மணி (3.5 கி.மீ/வி) வேகத்தைப் பெற்றது.
ஈர்ப்பு விசை உதவி அமைப்பு என்பது எரிபொருளைச் சேமிக்கும் அதே வேளையில் விண்கலத்தின் வேகம் மற்றும் திசையை மாற்றுவதற்கு ஒரு கோளின் ஈர்ப்பு விசை மற்றும் இயக்கத்தைப் பயன்படுத்துவதாகும். இது ஸ்லிங்ஷாட் சூழ்ச்சி (slingshot manoeuvre) என்றும் அழைக்கப்படுகிறது.
JUICE விண்கலம் வியாழன் மற்றும் அதன் பனி நிலவுகளை, குறிப்பாக சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கானிமீடே (Ganymede) ஆய்வு செய்யும்.
இந்த விண்கலம் 2031 ஆம் ஆண்டில் வியாழனின் சுற்றுப்பாதையிலும், 2034 ஆம் ஆண்டில் கானிமீடேவின் சுற்றுப்பாதையிலும் நுழையத் திட்டமிடப்பட்டுள்ளது.