பூமியின் பெருங்கடல் வெப்ப உள்ளடக்கம் (OHC) 2025 ஆம் ஆண்டில் கூடுதலாக ~23 ஜெட்டாஜூல் (ZJ) வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலம் ஒரு புதிய அளவை எட்டியது.
இது தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக பதிவான அதிகளவிலான வெப்பத்தைக் குறிக்கிறது.
உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1981–2010 ஆம் ஆண்டுகளின் சராசரியை விட ~0.5°C அதிகமாக இருந்ததுடன் பசுமை இல்ல வாயுக்களால் பிடிக்கப் பட்ட அதிகப்படியான வெப்பத்தில் கிட்டத்தட்ட 90% வெப்பத்தினைப் பெருங்கடல்கள் உறிஞ்சின.
அதிகரித்தப் பெருங்கடல் அடுக்குகள், கடல் வெப்ப அலைகள், கடுமையான புயல்கள், பவளப் பாறைகள் வெளுப்பு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் உற்பத்தித் திறனுக்கான அச்சுறுத்தல்கள் ஆகியவை இதன் தாக்கங்களில் அடங்கும்.
புவி வெப்பமடைதலின் முதன்மை இடையகமாக பெருங்கடல்கள் இருப்பதையும், பருவநிலை தணிப்பு நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவையையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.