ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) சமமான புவி வரைபடம் போன்ற மாற்றுகளைக் கொண்டு மெர்கேட்டர் வரைபடத்தை மாற்றுவதற்கான 'Correct the Map' பிரச்சாரத்தை ஆதரித்து உள்ளது.
மெர்கேட்டர் வரைபடமானது பள்ளிகள், ஊடகங்கள் மற்றும் இயங்கலைத் தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது நிலப்பரப்புகளின் அளவை அமைப்பு ரீதியாக உருவேறுபடுத்தி, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்தை பெரிதுபடுத்திக் காட்டி, ஆப்பிரிக்காவை குறுக்கிக் காட்டுகிறது.
1569 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட மெர்கேட்டர் வரைபடம் ஆனது ஒரு வழிச் செலுத்தல் சிக்கலைத் தீர்க்க முயன்ற பிளெமிஷ் வரைபடவியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டரால் வடிவமைக்கப்பட்டது.
ஒரு கப்பல் ஒரு நிலையான திசைகாட்டி திசையைப் பின்பற்றும்போது, அது கடைபிடிக்கும் ரம்ப் கோடு என்று அழைக்கப்படுகின்ற பாதையானது பெரும்பாலான தட்டையான வரைபடங்களில் உள்ள ஒரு வளைகோடாகும்.
மெர்கேட்டரின் புவியியல் கணிப்பு வடக்கு-தெற்கு நீட்சியினை நீள் வாக்கில் அமைத்ததால் அனைத்து ரம்ப் கோடுகளும் நேர் கோடுகளாகத் தோன்றின.
உருவேறுப்படுத்திய மெர்கேட்டர் அளவுகோல் என்றால், துருவங்களுக்கு அருகிலுள்ள நிலப்பரப்புகள் பெரிதாகவும், அதே நேரத்தில் நிலநடுக் கோட்டிற்கு அருகிலுள்ளவை உண்மையில் இருக்கும் அளவினை விட சிறியதாகத் தோன்றின.
இதன் விளைவாக, 30 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட ஆப்பிரிக்கா, பெரும்பாலும் மெர்கேட்டர் வரைபடங்களில் 14 மடங்கு சிறிய கிரீன்லாந்தைப் போலவே பெரியதாகத் தோன்றும்.
ஐரோப்பிய கண்டம் மூன்றில் ஒரு பங்கு பெரியதாக இருந்தாலும் ஆப்பிரிக்காவுடன் ஒப்பிடத் தக்க வகையில் பெரிதாகத் தெரிகிறது.
இதேபோல், கனடா, ரஷ்யா மற்றும் வடக்கு ஐரோப்பா பெரிதாகத் தோன்றும் அதே நேரத்தில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகள் அளவில் குறுகி வருகின்றன.
மெர்கேட்டர் வரைபடத்திற்கு மாற்றாக சமமான புவி வரைபடம் ஆனது 2018 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
மற்றொரு தெரிவு 1970 ஆம் ஆண்டுகளில் மீண்டும் பிரபலப் படுத்தப்பட்ட கால்-பீட்டர்ஸ் வரைபடம் ஆகும்.