தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது பூம்புகார் கடற்கரையில் கடலடி தொல்பொருள் ஆய்வுகளைத் தொடங்கியது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இந்த ஆய்வு தொடங்கியது.
இந்தத் திட்டமானது இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற் கொள்ளப் படுகிறது.
காவேரிப் பூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகார் என்பது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் பக்கவாட்டில் ஊடுருவி ஆய்வு செய்யக்கூடிய சோனார், எதிரொலி ஆழமானி, ROV (தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம்) மற்றும் கடலடி நிலப்பரப்பு ஆய்வுக் கருவிகள் போன்ற மேம்பட்ட உபகரணங்கள் அடங்கும்.