ஒடிசாவில் உள்ள பூரி, கொதிக்கவோ அல்லது வடிகட்டவோ அவசியமில்லாமல் நேரடியாக குடிக்கப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இந்தியாவின் முதல் நகரமாக அதிகாரப் பூர்வமாக மாறியுள்ளது.
பூரி நகரின் இந்த சாதனை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் நீர் சான்றிதழ் குறித்த உச்ச நிலை சான்றளிக்கும் அமைப்பான இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) இணக்கத்துடன் உள்ளது.
இந்தப் பணி, பாதுகாப்பான நீர் அணுகலுக்கான மையத்தின் 2015 ஆம் ஆண்டு அடல் புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்தின் (AMRUT) ஒரு பகுதியாகும்.
2017 ஆம் ஆண்டில், 'குழாய்வழி குடிநீர்' என்ற முன்னோடியான முன்னெடுப்பினை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மாநிலமாக ஒடிசா ஆனது.
2025 ஆம் ஆண்டின் இறுதியில், 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட பூரி நகர், ஏற்கனவே 24x7 நேரமும் குடிப்பதற்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்கும் முதல் நகரமாக இருந்தது.
1908 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஜெர்சி நகரம் அதன் நீர் விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்த உலகின் முதல் நகரமாக மாறியது.