TNPSC Thervupettagam

பூர்வகுடி மற்றும் பழங்குடியினரின் வன நிர்வாக அறிக்கை

April 5 , 2021 1502 days 615 0
  • சமீபத்தில் பூர்வகுடி மற்றும் பழங்குடியினரின் வன நிர்வாகம் என்ற தலைப்பில் ஓர்  அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கை, ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் பாதுகாப்பு அமைப்பு மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளிலுள்ள பூர்வகுடி மக்களின் மேம்பாட்டிற்கான நிதியம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
  • கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பூர்வகுடி மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் காடுகள் அழிப்பு வீதம் வெகு குறைவாக உள்ளது.
  • அப்பகுதியிலுள்ள பிற காடுகளை அதிகாரிகள் பாதுகாப்பதை ஒப்பிடுகையில் பூர்வகுடி மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காடுகளைப் பாதுகாப்பதில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை இந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டுகிறது.
  • அமேசான் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள பாதிக்கப்படாத காடுகளில் ஏறத்தாழ 45% காடுகள் பூர்வகுடி மக்களின் வாழ்விடப் பகுதிகளில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
  • பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்படாத காடுகளின் பரப்பளவு, 2000 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் 4.9% மட்டுமே குறைந்துள்ளது.
  • இருப்பினும் பூர்வகுடி மக்கள் வாழாத பகுதிகளில் 11.2% வரை குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்