TNPSC Thervupettagam

பெகாசூஸ் ஒற்றியறி மென்பொருள் (ஸ்பைவேர்)

November 2 , 2019 2082 days 716 0
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் "பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்" குறித்து உளவு பார்ப்பதற்காக பிரபலமான தகவல் பரிமாற்றத் தளமான வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தப் பட்டது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • பெகாசூஸ் என்ற ஒற்றியறி மென்பொருளைப் (ஸ்பைவேர்) பயன்படுத்தி இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • பெகாசூஸ் என்பது கைபேசி சாதனங்களில் ஊடுருவக் கூடிய ஒரு ஸ்பைவேர் ஆகும்.
  • இது "மிகவும் அதிநவீன” திறன்பேசி ஸ்பைவேர்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.
  • இது இஸ்ரேலிய இணைய மென்பொருள் நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • என்எஸ்ஓ குழுமமானது டெல் அவிவ் நகரில் உள்ள இது “கண்காணிப்புத் தொழில்நுட்பத்தில்" நிபுணத்துவம் பெற்ற ஒரு இணைய வழிக் குற்றப்  பாதுகாப்பு நிறுவனமாகும்.

இது எவ்வாறு செயல்படுகின்றது?

  • செய்திச் சுரண்டல் இணைப்பை அனுப்புவதன் மூலம் பெகாசூஸ் செயல்படுகின்றது.
  • அந்தக் குறிபிட்ட பயனர் இந்த இணைப்பை அழுத்தினால், கண்காணிப்பை அனுமதிக்கும் மால்வேர் அல்லது குறியீடானது அந்தப் பயனரின் தொலைபேசியில் நிறுவப் படும்.
  • பெகாசூஸ் நிறுவப் பட்டதும், இந்தத் தகவல் திருட்டை மேற்கொள்பவர் அந்தப் பயனரின் தொலைபேசியில் உள்ள முழுமையான தகவலைப் பெறுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்