TNPSC Thervupettagam

பெட்ரா மற்றும் எல்லோரா குகைகளின் இரட்டை நகர ஒப்பந்தம்

December 20 , 2025 2 days 38 0
  • இந்தியாவும் ஜோர்டானும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களான பெட்ரா மற்றும் எல்லோரா குகைகளுக்கு இடையேயான இரட்டை நகர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • எல்லோரா குகைகள் மகாராஷ்டிராவின் சரணந்திரி மலைகளில் இலகங்கா நதிக்கு அருகில் அமைந்துள்ளன.
  • எல்லோரா குகைகள் இராஷ்டிர கூடர் மற்றும் யாதவர் வம்சத்தினரால் கி.பி 600 முதல் 1000 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்திற்கு இடையில் செதுக்கப்பட்டன.
  • இதில் சுவரோவிய ஓவியங்களுடன் இந்து, பௌத்த மற்றும் சமண சமய நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • பெட்ரா குகைகள் இளஞ்சிவப்பு மணற்கல் பாறைகளில் செதுக்கப் பட்டிருப்பதால் ரோஸ் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • பெட்ரா குகைகள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் நபடேயன் பேரரசின் தலைநகராக இருந்தது.
  • பெட்ரா பகுதியளவு கட்டமைக்கப்பட்டு, பகுதியளவு பாறையில் செதுக்கப்பட்டுள்ளது என்பதோடு மலைகள், குறுகிய கடவுகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் இது சூழப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்