TNPSC Thervupettagam

பெண் தொழிலாளர் வள இலக்கு – 2030

November 18 , 2025 10 days 74 0
  • இந்திய அரசானது, பெண் தொழிலாளர் வள பங்கேற்பு விகிதத்தை (FLFPR) 2024 ஆம் நிதியாண்டில் 41.7 சதவீதத்திலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 55% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஏற்பமைவு மிக்க மற்றும் தொலைதூர வேலை, சம ஊதியம், பாதுகாப்பான பணி இடங்கள், மலிவு விலையிலான குழந்தைப் பராமரிப்பு மற்றும் ஊதியம் இல்லாத பராமரிப்புப் பணிகளுக்கு முறையான அங்கீகாரம் ஆகியவை இதில் அடங்கும்.
  • முறைப்படுத்தப்பட்டு வருகின்ற பராமரிப்பு சார் பொருளாதாரம், பெரும்பாலும் பெண்களுக்கு மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
  • இந்தத் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% முதலீடு செய்வது 11 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
  • சமீபத்தியத் தரவு ஆனது FLFPR 34.1% (2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வாராந்திர நிலை) மற்றும் 33.4% (2025 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில்) எனக் காட்டுகிறது.
  • ஷ்ரம் சக்தி நிதி 2025 வரைவு, இந்தியாவின் மக்கள்தொகை நன்மையைப் பயன்படுத்த பெண்களுக்கு ஒழுக்கமான வேலைவாய்ப்புக்கான அணுகலை விரிவுபடுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்