TNPSC Thervupettagam

பெண் தொழில்முனைவோருக்கான தேசியப் பிரச்சாரம்

January 21 , 2026 10 hrs 0 min 18 0
  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM) கிராமப்புற பெண்களுக்கு வேளாண் அல்லாத வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக தொழில்முனைவோர் குறித்ததான தேசியப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சாரம் ஆனது, மூன்று கோடி லட்சபதி தீதிக்களை (ஆண்டுதோறும் 1 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் பெண்கள்) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமூக வள நபர்கள் சாத்தியமான நிறுவனங்களை அடையாளம் காணவும், பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டவும், நீண்ட கால ஆதரவை வழங்கவும் பயிற்சி அளிக்கப்படுவார்கள்.
  • இந்தத் திட்டம் 50,000 சமூக வள நபர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மற்றும் 50 லட்சம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியினை அளிக்கும்.
  • இந்த முன்னெடுப்பு உள்ளூர்ப் பொருளாதாரங்களை வலுப்படுத்தும் என்பதோடு நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும், பெண்கள் தலைமையிலான ஒரு சுய சார்பு கிராமப் புற வேளாண்மை சாராதப் பொருளாதாரத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்