பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிராக சகிப்புத்தன்மையல்லாததற்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 06
February 7 , 2020 1997 days 464 0
பெண் பிறப்புறுப்பு சிதைவை (Female Genital Mutilation - FGM) ஒழிப்பதற்கான ஐ.நா.வின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
இந்நாளானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கையான FGM குறித்த விழிப்புணர்வை இந்நாள் பரப்புகின்றது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் - “இளைஞர் சக்தியைப் பரப்புதல்: சுழிய பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு பத்தாண்டு காலம்” என்பதாகும்.
இந்தக் கருப்பொருளானது 2030 ஆம் ஆண்டுக்குள் FGMஐ ஒழிப்பதின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
இந்த நடைமுறையானது பொதுவாக ஆப்பிரிக்காவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.
2008 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமும் யுனிசெஃப்பும் இணைந்து FGMஐ ஒழிப்பதற்கான மிகப்பெரிய உலகளாவியத் திட்டத்திற்குத் தலைமை தாங்கின.