TNPSC Thervupettagam

பெண் விஞ்ஞானிகள் சர்வதேச அனுபவத்தைப் பெறுதல்

March 10 , 2020 1984 days 707 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (Department of Science and Technology - DST) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம் (WISTEMM - Women in Science, Technology, Engineering, Mathematics and Medicine) ஆகிய துறையில் உள்ள பெண்களுக்கான  இந்திய – அமெரிக்கத் தோழமைத் திட்டமானது இந்திய – அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்துடன் (IUSSTF - Indo-U.S. Science & Technology Forum) இணைந்து பெண் விஞ்ஞானிகள் பலருக்குச் சர்வதேச அனுபவத்தை வழங்கியுள்ளது.
  • சுமார் 20 பெண் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் அவர்களின் ஆராய்ச்சி தொடர்பான புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவதற்காகவும் அமெரிக்கா முழுவதும் உள்ள 20 முன்னணி நிறுவனங்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
  • WISTEMM ஆனது பின்வருவனவற்றிற்காக இந்தியப் பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • அமெரிக்காவில் உள்ள முதன்மை நிறுவனங்களில் சர்வதேசக் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல் மற்றும்
    • அவர்களின் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்