பெண் விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான உதவி எண்
March 10 , 2020 1989 days 625 0
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோருக்காக ஒரு உதவி எண்ணை வெளியிட்டுள்ளார்.
இது அமைச்சகத்தின் திட்டங்கள் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்கு விடை அளித்து உதவ இருக்கின்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கான தகுதிகள் அல்லது பிற தேவைகள் பற்றிய தகவல்களையும் இவர்கள் பெற இருக்கின்றனர்.