எல்லைப் பாதுகாப்புப் படையின் பெண்களால் இயக்கப்படும் முதலாவது ஒட்டக படைப் பிரிவானது ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை ஒட்டிய இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
டிசம்பர் 01 ஆம் தேதி நடைபெற உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சித் தின அணி வகுப்பில் இந்த அணி முதல் முறையாக பங்கேற்க உள்ளது.
இந்தப் படையானது உலகிலேயே இது போன்ற முதல் வகை படைப் பிரிவாகும்.