பெண்களின் சுகாதார நலனில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான செயல்திட்டம் குறித்த அறிக்கை
February 23 , 2025 133 days 133 0
இந்த அறிக்கையானது உலகப் பொருளாதார மன்றம் மற்றும் மெக்கின்சி சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் தங்கள் வாழ்நாளில் 25% நாட்கள் அதிகமாக உடல்நலம் குன்றிய நிலையில் வாழ்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பாதிப்பு நிலைகள், பெண்களின் சுகாதார இடைவெளியில் 1/3 பங்கினைக் கொண்டுள்ளன.
கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய், பேறுகாலத்திய உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் போன்றவை அவர்களின் ஆயுட்காலத்தினையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் நிலைகளும் இதில் அடங்கும்.
இந்த சுகாதார இடைவெளியை நிவர்த்தி செய்வது, 2040 ஆம் ஆண்டிற்குள் உலகின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 டிரில்லியன் டாலரை உருவாக்க உதவும்.