பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணையம் (CSW) தனது 2026 ஆம் ஆண்டிற்கான 70-வது கூட்டத் தொடரை நிறைவு செய்தது என்ற நிலையில்இதில் உறுப்பு நாடுகள் பாலினச் சமத்துவம் குறித்த முக்கிய முடிவுகளை ஏற்றுக் கொண்டன.
இது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் (ECOSOC) கீழ் உள்ள ஒரு செயல்பாட்டு ஆணையமாகும் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான முதன்மையான உலகளாவிய அமைப்பாகும்.
1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பு, அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உலகளாவியத் தரநிலைகளை நிர்ணயிப்பதோடு, நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 5-இன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களின் அமலாக்கத்தை ஆய்வு செய்கிறது.
இது உலகளவில் சட்டச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பாதுகாப்பு, நீதிக்கான அணுகல் மற்றும் பெண்களின் சுகாதார உரிமைகள் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துகிறது.