பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்றக் குழுக்களின் இரண்டு நாட்கள் அளவிலான தேசிய மாநாடு திருப்பதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது, 'திருப்பதி தீர்மானத்தை' ஏற்றுக் கொண்டது.
இந்தத் தீர்மானமானது, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை முன்னேற்றுதல் அனைத்துப் பாலினத்திற்கும் பயனளிக்கும் நிதி ஒதுக்கீட்டில் கவனம் செலுத்துதல், அனைத்து மட்டங்களிலும் பெண்களின் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் பாலினப் பாகுபாடு கண்டறிதல் பகுப்பாய்வினைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஒரு செயல் திட்டத்தினைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
முன்னேற்றம் இருந்த போதிலும், மக்களவை உறுப்பினர்களில் பெண்கள் 14% ஆக மட்டுமே உள்ளனர் என்பதோடு இது உலகளாவியச் சராசரியான 26.5 சதவீதத்தினை விடக் குறைவாகும்.
இந்தியா "ஜனநாயகத்தின் தாய்" என்று கொண்டாடப் படுகிறது.