பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 25
November 27 , 2019 1993 days 943 0
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 ஆம் தேதியன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப் படுகின்றது.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் கற்பழிப்பு, குடும்ப வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்பதையும் இது போன்ற பிரச்சினைகள் மறைக்கப் படுவதைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "ஆரஞ்சு நிற உலகம்: தலைமுறை சமத்துவம் கற்பழிப்பிற்கு எதிராக நிற்கின்றது" என்பதாகும்.
இது போன்ற ஒரு தினமானது 1981 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்ணியவாதிகளால் முதல் முறையாக கடைபிடிக்கப் பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1999 ஆம் ஆண்டில் முதன்முறையாக இத்தினத்தை அங்கீகரித்தது.