பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 25
November 27 , 2022 999 days 463 0
இத்தினமானது, 1960 ஆம் ஆண்டில் ரஃபேல் ட்ருஜிலோவின் கட்டளையின் பேரில் படு கொலை செய்யப்பட்ட டொமினிகன் குடியரசினைச் சேர்ந்த ஆர்வலர்களான மிராபால் சகோதரிகளுக்கான நினைவு நாளாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கையானது, 1979 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் நாளாக நவம்பர் 25 ஆம் தேதியானது 1981 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினத்தின் கருத்துரு, ‘UNITE! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை' என்பதாகும்.