பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் உத்தரப் பிரதேசம்: NCRB 2017 ஆம் ஆண்டுத் தரவு
November 2 , 2019 2082 days 686 0
இந்த அறிக்கையின்படி, நாட்டில் பெண்களுக்கு எதிராக 3.59 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 56,011 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 31,979 குற்ற வழக்குகளும் மேற்கு வங்கத்தில் 30,002 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்த அறிக்கையின் படி, ‘பெண்களுக்கு எதிரான குற்றம்’ என்பதன் வரையறையில் கொலை, கற்பழிப்பு, வரதட்சணை மரணம், தற்கொலை செய்தல், அமிலத் தாக்குதல், பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கடத்தல் ஆகியவை அடங்கும்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau - NCRB) படி, 2017 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள தங்கும் விடுதிகள் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக இருந்தன. இதில் 26 பாலியல் துன்புறுத்தல்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மும்பை (24 பாலியல் துன்புறுத்தல்கள்) நகரமானது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது.
பணியிடத்தில் துன்புறுத்தல், பொதுப் போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பிற இடங்கள் உள்ளிட்ட இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த தகவல்களை NCRB வழங்குவது இதுவே முதல் முறையாகும்.