பெண்களுக்கான இந்தியாவின் முன்னணி நிதித் தளமான Lxme, பெண்களுக்காக பிரத்தியேகமாக LxmePay எனப்படும் நாட்டின் முதல் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினை (UPI) அறிமுகப்படுத்தியுள்ளது.
LxmePay ஆனது மற்ற LxmePay பயனர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் உட்பட ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் பயனர்களுக்கு டிஜிட்டல் தங்கத்தை வெகுமதியாக அளிக்கிறது.
பெண்கள் தங்கள் பணங்களைத் திறமையாக நிர்வகிக்க உதவும் வகையில் இந்தச் செயலி சீர்மிகு செலவு கண்காணிப்பு, தானியங்கி நுண்ணறிவுகள் மற்றும் மாதாந்திர எச்சரிக்கைகளை வழங்குகிறது.