பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீடு 2025/26
December 7 , 2025 6 days 48 0
இந்தக் குறியீட்டை ஜார்ஜ்டவுன் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (GIWPS) மற்றும் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் ஒஸ்லோ (PRIO) ஆகியவை வெளியிட்டு உள்ளன.
WPS குறியீடு ஆனது உள்ளடக்கம், நீதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில், 181 நாடுகளில் பெண்களின் நிலையை அளவிடுகிறது.
டென்மார்க் 0.939 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில்இதில் ஆப்கானிஸ்தான் 0.279 மதிப்பெண்களுடன் 181வது இடத்தில் உள்ளது.
இந்தியா 0.607 மதிப்பெண்களுடன் இதில் 131வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டில் மொத்தம் 676 மில்லியன் பெண்கள் மோதல்களுக்கு உள்ளாகும் நிலையை எதிர்கொண்டனர்.
இந்தத் தரவரிசையில் மிகவும் கடைசி இடங்களில் உள்ள பத்து நாடுகளில் ஒன்பது நாடுகள் மோதல்களால் பாதிக்கப்பட்ட அல்லது பலவீனமான நாடுகள் ஆகும்.
பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் குறைந்து வருவதால், முன்னேற்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு அமெரிக்கா 31வது இடத்தில் உள்ளது.