TNPSC Thervupettagam

பெண்கள் உதவி மையங்கள் @ காவல் நிலையங்கள்

December 7 , 2019 2061 days 741 0
  • நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையங்களை அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது இந்த நோக்கத்திற்காக நிர்பயா நிதியிலிருந்து ரூ 100 கோடி மதிப்பிலான நிதியை ஒதுக்கியுள்ளது.
  • இந்த உதவி மையங்களில் மகளிர் காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப் படுவார்கள்.
  • வழக்குரைஞர்கள், உளவியலாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற வல்லுநர்களும் இந்த உதவி மையங்களில் ஒரு பகுதியாக இருப்பார்கள். மேலும் இவர்கள் உதவி தேவைப் படுபவர்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை, தங்குமிடம், மறுவாழ்வு மற்றும் பயிற்சி போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்