பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
April 23 , 2025 7 days 82 0
ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (WCD) ஆனது, சமீபத்தில் "பருவநிலை மாற்றம் ஆனது வேளாண் சூழலியல் மண்டலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளில் எத்தகையப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பருவநிலை மற்றும் நிலப் பரப்புகளுடன் கூடிய 20 வேளாண் சூழலியல் மண்டலங்கள் உள்ளன.
ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் தலா ஐந்து வேளாண் சூழலியல் மண்டலங்கள் காணப்படுகின்றன.
வடகிழக்கு மலைகள் சார்ந்த (17வது) சூழலியல் மண்டலம் ஆனது மொத்தம் ஒன்பது மாநிலங்களில் பரவியுள்ளது.
மேற்கு கரையோரச் சமவெளி (19வது) சார்ந்த சூழலியல் மண்டலமானது மொத்தம் எட்டு மாநிலங்களில் பரவியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அவர்களின் சிறிய உடல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பராமரிப்பாளர்களைச் சார்ந்திருப்பதன் நிலை ஆகியவை காரணமாக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.