அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, பொலிவியாவின் பெனி புல்வெளிக் காடுகளில் உள்ள ஒரு சிறிய ஆலிவ்-பச்சை நிறப் பறவையானது தவறாக வகைப்படுத்தப் பட்டது, ஆனால் புதிய ஆராய்ச்சி அதை ஒரு தனித்துவமான இனமாக உறுதிப்படுத்தியது.
இதன் அறிவியல் பெயரான ஹைலோபிலஸ் மோக்சென்சிஸ் இது மஸ்கிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
இது வடக்குப் பொலிவியாவின் வெப்பமண்டல ஈரப்பதமான தாழ்நிலக் காடுகளில், பெரும்பாலும் வனங்களின் மர விதானங்கள் மற்றும் விளிம்புகளில் வாழ்கிறது.
இது வாழ்விட இழப்பு, மாறிய மழைப்பொழிவுப் போக்கு, மனித நடவடிக்கைகள் மற்றும் நதி அல்லது வெள்ளப்பெருக்கு மாற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர் கொள்கிறது என்பதோடு இது இன்னும் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலால் மதிப்பிடப் படவில்லை.