பென்சில் தளமானது (குழந்தைத் தொழிலாளர்களற்ற நிலைக்கான திறனுள்ள அமலாக்கத் தளம்/ Platform for Effective Enforcement for No Child Labour – PENCIL) இந்தியா முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த 361 புகார்களைத் தீர்ப்பதில் திறம்படி செயல்படுகின்றது.
இது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் விதிகளை திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்வதையும் தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எந்தவொரு நபரும் குழந்தைத் தொழிலாளர் குறித்த ஆன்லைன் (நிகழ்நேர) புகார்களை பென்சில் தளத்தில் பதிவு செய்யலாம்.