TNPSC Thervupettagam

பெப்சிகோ உருளைக்கிழங்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

August 13 , 2026 5 days 56 0
  • 'லேஸ்' (Lay’s) சிப்ஸ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் FL 2027 (FC-5) ரக உருளைக் கிழங்கிற்கான 'பெப்சிகோ இந்தியா' (PepsiCo India) நிறுவனத்தின் பதிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • பெப்சிகோ விவசாயிகளின் மீது வழக்கு தொடர்ந்தது என்ற காரணத்திற்காக மட்டுமே 2001 ஆம் ஆண்டின் தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு (PPVFR) சட்டத்தின் பிரிவு 34(h)-இன் கீழ் அதன் பதிவை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
  • பெப்சிகோ தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், விவசாயிகள் இந்தச் சட்டத்தின் பிரிவு 39(1)(iv)-இன் கீழ் பாதுகாப்பைக் கோரலாம்.
  • பெப்சிகோ 2018-19 ஆம் ஆண்டில் காப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் குறைந்தது ஒன்பது குஜராத் விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்தது, ஆனால் 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் நிபந்தனையின்றி அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றது.
  • 2021 ஆம் ஆண்டில் பெப்சிகோவின் 2016 ஆம் ஆண்டுப் பதிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த சர்ச்சை தொடங்கியது, பின்னர் 2024 ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் இந்த முடிவு ரத்து செய்யப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்